The Family Man தொடரில் தமிழர்களை கொச்சைப்படுத்துவதா - கொந்தளித்த சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா இன்று முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “என் தந்தை மறைந்தபோது அறிக்கையோடு நிறுத்திவிடாமல் முதல்வர் ஸ்டாலின் அழைத்து ஆறுதல் கூறினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தான் நேரில் வந்தோம்.
எழுவரை விடுதலை செய்வது தொடர்பாகவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். எழுவர் விடுதலையில் உறுதியாக இருப்பதாக முதல்வர் என்னிடம் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசும் முதல்வர் ஸ்டாலினும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.
12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளேன். தேர்வுகளை விடவும் மாணவர்களின் உயிர் தான் முக்கியம்.
The Family Man திரைப்படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை தீவிரவாதமாக சித்தரிப்பது அவசியமற்றது” என்றார்.