தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் அவசியமா ? சீமான் கேள்வி

M K Stalin DMK Seeman
By Vidhya Senthil Jul 27, 2024 09:30 PM GMT
Report

  தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறுவது இது தான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமஸ்கிருதம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் ‘சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் அவசியமா ? சீமான் கேள்வி | Seeman Archaeology Tn Govt Sanskrit

சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது?

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா? அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
[ 

திராவிட மாடல்

அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் அவசியமா ? சீமான் கேள்வி | Seeman Archaeology Tn Govt Sanskrit

தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் ‘தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது’ என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் .