பேசுனாலே குண்டாஸ் போடும் அரசு கொலைக்கு என்ன செய்யபோகுது..? சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொல்லப்பட்டதற்கு கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, கொலை நடந்து இத்தனை நாட்களாகியும் அரசு மெத்தனமாக உள்ளது என்று விமர்சித்து, தேவாலயத்தில் அழைத்து பேச்சுவார்த்தை எனக் கூறி அடித்துக் கொலை செய்யப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது? என்று சாடி, சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் இதுவரை விசாரிக்கவில்லை என்றும் காவல்துறை ஏன் இன்னும் கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடவில்லை என்று வினவினார்.
நான் மறக்க மாட்டேன்
தொடர்ந்து பேசிய சீமான், பேசுவதற்கெல்லாம் குண்டாஸ் போடும் அரசு, கொலைக்கு என்ன முறையில் வழக்குப்பதிவு செய்வார்கள் என்ற கேள்வியை முன்வைத்து, குற்றவாளி தலைமறைவாகி விட்டார் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? என கடுமையாக சீறினார்.
மேலும், இந்த வழக்கில் கொலைக்கு துணை போகிறார்களா என்று கூறுவதை விட குற்றவாளிகளே திமுகதான் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்கு இல்லை என்றும் சட்டம், ஒழுங்கு இருந்திருந்தால் இது போன்ற கொலைகள் நடந்திருக்காது எனக்கூறினார்.
கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் மறக்கலாம் ஆனால், நான் மறக்க மாட்டேன்" என்றும் கூறினார்.