தமிழகத்தில் குற்ற சம்பவங்களுக்கு வட இந்தியர்கள் தான் காரணம் - சீமான் காட்டம்
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதற்கு வடஇந்தியர்கள் தான் காரணம் என சீமான் கூறியுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாலாஜாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், இஸ்லாமிய மக்களை எதிர்ப்பதை தவிர, பா.ஜ.க.வுக்கு வேறு கோட்பாடு, கொள்கை எதுவும் கிடையாது. நான் இருக்கும் வரை 8 வழி சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் கட்ட முடியாது.
சிப்காட் தொழிற்சாலைகள் தொடங்க முடியாது. அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கலாம், கட்டுங்கள் பார்ப்போம். வடஇந்தியர்களை உழைப்பதற்கு ஈடுபடுத்தி பழகிவிட்டால் பிறகு அவர்களை தவிர்க்க முடியாது. பிறகு 500 ரூபாய்க்கு வேலை செய்தவன் 5,000 ரூபாய் கேட்பான்.
கொந்தளிப்பு
எனக்கு வாக்கு செலுத்தி என்னை ஆட்சியில் உட்கார வையுங்கள், நான் நாட்டை பார்த்து கொள்கிறேன். நீங்கள் வீட்டில் நிம்மதியா உறங்குங்கள். குற்ற சம்பவ நிகழ்வுகள் அதிகமாக நடப்பதற்கு காரணம் வடஇந்தியர்கள் தான். உயர் காவல்துறை அதிகாரிகள் முதல்வரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இதுதான் உள்ளது.
நகை பறிப்பு, கஞ்சா விற்பது வட இந்தியர்கள் தான். திராவிட மாடல் ஆட்சி என்பது எங்களுக்கான அரசு இல்லை. மொழி, இனம், நிலம், மக்களின் நலன், எதிர்காலத்திற்கான அரசு இல்லை. ஒரு குடும்பம் வாழ்வதற்கும், ஆட்சி செய்வதற்கும் நாமெல்லாம் கூடி உழைக்கிறோம், ஓட்டு போடுகிறோம். அதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.