விவேக் மரணம் தொடர்பான சந்தேகங்கள்! மக்களின் அதிர்ச்சிக்கு விளக்கம் தருக- சீமான்

seeman corona vaccine vivek death
By Fathima Apr 17, 2021 06:25 AM GMT
Report

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இழப்பால் ஒட்டு மொத்த தமிழகமே பேரதிர்ச்சியில் மூழ்கிய நிலையில், கொரோனா தடுப்பூசி போட்ட அடுத்த நாளை உடல்நிலை சரியில்லாமல் போனதும் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

கலைச்சேவையும், மக்கள் சேவையும் புரிந்திட்ட மண்ணின் மகத்தான பெருங்கலைஞர் அன்புச்சகோதரர் விவேக் அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், தான் மரணிக்கும் முதல் நாள் வரை கொரோனா குறித்த விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டு வந்த மாமனிதர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளை நிகழ்ந்த அவரது மரணம் தடுப்பூசி குறித்து மக்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசு இதுகுறித்து கவனம் செலுத்தி, தடுப்பூசி குறித்தும் விவேக் மரணம் குறித்தும் மக்களிடையே நிலவும் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களுக்கு தெளிவான விடையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

விவேக் மரணம் தொடர்பான சந்தேகங்கள்! மக்களின் அதிர்ச்சிக்கு விளக்கம் தருக- சீமான் | Seeman About Vivek Death Controversy Coronavaccine