எனக்கு பயமா?, வியலட்சுமி புகாரில் சம்மன் வரவில்லை.. நானே வருகிறேன் - சீமான் பேட்டி!

Vijayalakshmi Tamil nadu Seeman
By Vinothini Sep 03, 2023 04:32 AM GMT
Report

நடிகை தன் மீது அளித்த புகார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

நடிகை புகார்

நடிகர் விஜய் நடித்த ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி, இவர் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்தார். அப்போது சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீமான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

seeman-about-vijayalakshmi-case

இதனால் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், பின்னர் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து தற்பொழுது அந்த நடிகை தமிழகத்திற்கு நேரடியாக வந்து புகார் அளித்துள்ளார். மேலும், இவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.

சீமான் பேட்டி

இந்நிலையில், போலீசார் உதகை சென்று சீமானுக்கு சம்மன் அளிக்கவுள்ளதாகவும், அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் தெரியவந்தது. தற்பொழுது பேசிய சீமான், "விசாரணைக்க ஆஜராகும் படி எனக்கு எந்த சம்மன் இதுவரை வரவில்லை. தன்னை கைது செய்யப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி என தெரிவித்தார்.

seeman-about-vijayalakshmi-case

விஜயலட்சுமி விவகாரத்தை சட்ட ரீதியாக வந்தால் சட்டரீதியாக சந்திப்பேன். அரசியல் ரீதியாக வந்தால் அரசியல் ரீதியாக சந்திப்பேன். 2011 ல் புணையப்படட இவ்வழக்கில் என் மீது எந்த தவறும் செய்யவில்லை என அப்பெண்ணே எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளார், அதன் பிறகு பலமுறை நான் சிறைக்கு சென்றுள்ளேன். என்னை கைது செய்யப்பட வேண்டுமென்றால் அங்கு வைத்தே கைது செய்திருக்கலாம்.

ஆனால் இதுவரை அப்படி நடக்காத நிலையில் வேண்டுமென்றே சிலர் வதந்தி பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். உதகையிலும் காவல்துறை இருந்தது. நாளை சென்னை சென்று விடுவேன். என்னை பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுகிறவன் போல் தெரிகிறதா" என்று பேசியுள்ளார்.