விஜய் எனக்கு எதிரியும் இல்ல.. போட்டியும் இல்ல - பல்டி அடித்த சீமான்

Vijay Tamil Cinema Seeman
By Sumathi Jan 06, 2026 01:54 PM GMT
Report

என் தம்பி விஜய் எனக்கு எதிரியும் இல்லை போட்டியும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

 ஜனநாயகன்

ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

விஜய் எனக்கு எதிரியும் இல்ல.. போட்டியும் இல்ல - பல்டி அடித்த சீமான் | Seeman About Vijay Jana Nayagan

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரம் தீர்ப்பை தொடர்ந்து அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது தொடர்பான கேள்விக்கு, நாட்டில் பல கோடி மக்கள் பசியாக இருக்கிறார்கள்.

சீமான்

முதலில் அவர்களது வீடுகளில் விளக்கேற்றுங்கள், பிறகு வீடு வீடாக விளக்கேற்றலாம் என்றார். மேலும் வீடுகள் எல்லாம் இருட்டிலா உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழை கொடுத்து விடலாம்,

காதல் தவெக மீதுதான்; ஆனால் கல்யாணம் திமுக கூட.. சொன்னது காங்கிரஸ் தலைவர்

காதல் தவெக மீதுதான்; ஆனால் கல்யாணம் திமுக கூட.. சொன்னது காங்கிரஸ் தலைவர்

அதன் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன், நெருக்கடி தரும் அளவிற்கு ஒன்றும் இல்லை. எனவே தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை. என் தம்பி விஜய் எனக்கு எதிரியும் இல்லை போட்டியும் இல்லை.

எனக்கு எதிரியே மற்ற பெரிய கட்சிகள் தான் . தமிழ் என்பது சீமானுக்கு அரசியல் பிழைப்பு என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு, உயிரோடு இருப்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டும் பதில் அளிக்கலாம், அவர் போய் பல நாள் ஆகிவிட்டது என கூறினார்.