விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்: சீமான்
திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்கள் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் பல தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கிறோம், 36 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம்.
ஆனால் கருத்துக்கணிப்பில் சி வோட்டர் நிறுவனம் எங்களை இணைக்கவில்லையே ஏன்? இது கருத்துக்கணிப்பின் நேர்மையை கேள்விக்குறியாக்கவில்லையா? தேர்தல் நேரத்தில் எங்களை பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக- தவெக இடையே நேரடி போட்டி என தவெக தலைவர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சீமான், தேர்தலில் தனித்துமட்டுமே போட்டியிடுவோம், நான் புரட்சி செய்ய வந்தவன், வியாபாரம் செய்யவில்லை, நாங்கள் போராளிகள்.
எந்த தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பது தெரிந்து விடும், நாங்களும் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறோம், மக்களின் வாக்குகள் மட்டுமே எங்களுக்கு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.