கனிமொழிக்கே சீட் இல்லை; உதயநிதிக்கு பிரச்சினையாக இருக்கும் - சீமான்

Udhayanidhi Stalin Dr. S. Ramadoss Smt M. K. Kanimozhi Seeman
By Karthikraja Mar 24, 2026 01:00 PM GMT
Report

கனிமொழி மாநில அரசியலுக்கு வருவதை யார் எதிர்ப்பார்கள் என தெரியும் என்று சீமான் பேசியுள்ளார்.

கனிமொழி குறித்து சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முதல் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், " உங்களுக்கு தெரியும் மாநில அரசியலுக்கு கனிமொழி வந்து வெற்றி பெறுவதை யார் எதிர்ப்பார்கள் என தெரியும். 

கனிமொழிக்கே சீட் இல்லை; உதயநிதிக்கு பிரச்சினையாக இருக்கும் - சீமான் | Seeman About Dmk Kanimozhi Into State Politics

கலைஞரின் மகள் கனிமொழிக்கே சீட் தராதவர்கள் கம்யூனிஸ்டுக்கு எப்படி கொடுப்பார்கள்? ஒரு சீட் அதிகமா கொடுங்கனு வேற பேசுறாங்க.

அவங்க ஒரு ஆளுமையுள்ள பெண். அவங்க மாநில அரசியலுக்கு வரும்போது, நாளைக்கு தம்பி உதயநிதியை முன்னிறுத்துவது பிரச்சினையாக இருக்கும்னு நினைப்பாங்க. 

வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை: உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

அதனால அவங்களை இங்க வர விடமாட்டாங்க. அவங்க என்னதான் இருந்தாலும், அவங்க உடன்பிறந்தவர்கள் அவங்க குடும்பத்தின் பெண் இல்லை என நினைப்பார்கள்" என பேசியுள்ளார்.

நான் ராமதாஸின் பிள்ளை

மேலும், திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியது குறித்த கேள்விக்கு, ஒரு சீட்டுக்கு சரணடையாமல் இப்போதாவது வெளியேறி மக்களை எச்சரித்தாரே என கூறியுள்ளார். 

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்தானது

ராமதாஸை கட்சிகள் கைவிட்டுள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, "கட்சிகள் கைவிட்டதாக சொல்லாதீர்கள். எங்கள் ஐயாவை மக்கள் கைவிடமாட்டார்கள். 85 வயதில் தமிழுக்காக ஒரு தலைவன் நடப்பானா? சமூகநீதி பேச அவரை தாண்டி ஆள் உண்டா?

இன்று இந்தியாவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசும் ஒரே ஆள் ஐயா தான். நான் ராமதாஸின் பிள்ளை. இன்று நான் பேசுவது அவரை கற்றுக்கொடுத்தது தான். ஐயாவின் கனவை பிள்ளைகள் நாங்கள் நிறைவேற்றுவோம்" என பேசியுள்ளார்.