இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவை ஏற்பீர்களா? சீமான் பதில்
seeman about dmk admk support in by election: இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் சீமான்
விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

சீமான் பொதுவேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில், இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி அறிவிக்கட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சீமான் பதில்
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், ஸ்டாலினின் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, இதை கூட்டணியாக பார்க்க முடியாது. நானும் அதை தான் சொல்கிறேன். தேர்தல் வரும் போது பார்க்கலாம்.

அதிமுக, திமுக விலகிவிட்டு என்னை பொதுவேட்பாளராக நிறுத்தும் என திமுகவும், முடிவெடுக்கவில்லை, அதிமுகவும் முடிவெடுக்கவில்லை, நானும் முடிவெடுக்கவில்லை. இதை கிளப்பிவிட்டது தவெக தான்.
ஈரோடு கிழக்கில் எல்லா கட்சிகளும் வெளியேறிவிட்ட போது, நாங்களும் திமுகவும் தான் போட்டியிட்டோம். அப்போது ஏன் நீங்கள் பொதுவேட்பாளரா என யாரும் கேட்கவில்லை.
திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் ஏற்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால், வேண்டாம் என எப்படி கூறுவேன்? பசியுடன் இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என சொல்லப்போவது இல்லை.
அவர்களை விமர்சனம் செய்தது அரசியல் நிலைப்பாடு. தனிப்பட்ட முறையில் ஸ்டாலின், எடப்பாடி மற்றும் விஜய்யை விமர்சிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.