முதல்வர் கெஜ்ரிவால் கைது..? வீட்டு முன் பலத்த பாதுகாப்பு - டெல்லியில் பெரும் பரபரப்பு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை 3வது முறையாக நோட்டிஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
கைதாக வாய்ப்பா?
இந்நிலையில் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்தி, அதற்குப் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில அமைச்சர் ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடு இருக்கும் பாதை மூடப்பட்டு அங்கு வசிப்பவர்கள் செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.