மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி - அலறிய மாணவன்!
8ஆம் வகுப்பு மாணவருக்கு, பள்ளி காவலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
காரைக்காலில், 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அரசின் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இங்கே மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பத்தாண்டுகளாக காவலாளியாக பணிபுரிபவர் தரங்கம்பட்டியை சேர்ந்த முகமது அலி(54).
இவர் வழக்கம் போல மாணவர்களை அதிகாலையில் எழுப்ப சென்றுள்ளார். அப்போது அங்கு 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவன் அலறி அடித்து எழுந்திருக்கவே, சக மாணவர்களும் எழுந்து பார்த்துள்ளனர்.
கதறிய மாணவன்
உடனடியாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனையடுத்து, அளித்த புகாரின் பேரில் போலீஸார் காவலாளியை கைது செய்து, போக்சோவின் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.