தற்கொலை செய்ய திட்டமிருந்ததா..? மக்களவை ஊடுருவல் விவகாரம் - திடுக்கிடும் தகவல்!!
மக்களவையில் இருவர் திடீரென பிரவேசித்த சம்பவம் நாடெங்கிலும் அடுத்தடுத்த கேள்வியினை அரசியல் வல்லுநர்கள் மட்டுமின்று மக்களிடமும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை விவகாரம்
சில தினங்கள் முன்பு மக்களவையில் இருவர் பாதுகாப்புகளை மீறி எம்.பி'க்களுக்கு நடுவே பிரவேசித்து புகை குண்டுகளை வீசியது நாடெங்கிலும் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில், ஊடுருவிய இரண்டு பேர், நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே முழக்கமிட்ட இரண்டு பெண்கள் என 5 பேர் கைதான நிலையில், அவர்களிடத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தற்கொலை திட்டமா..?
இந்நிலையில், தான் நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. "இந்தத் திட்டம் அதாவது புகை குண்டை வீசுவதற்கு முன்பு அவர்கள் அதாவது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு தங்கள் செய்தியை அனுப்புவதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில வழிகளை ஆராய்ந்தனர் என்று தெரியவந்துள்ளது.
அவர்கள் முதலில் தங்கள் உடலை தீப் புகாத ஜெல் மூலம் மூடிக்கொண்டு தங்களைத் தாங்களே எரித்துக் கொள்வதை குறித்து ஆராய்ந்தனர் என்றும் பின்னர் இந்த திட்டம் கைவிடபட்டதாக விசாரணையில் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.