எம்.ஜி.ஆர். சொல்லியும் கேட்காத சில்க் ஸ்மிதா - பல ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை
நடிகை சில்க் ஸ்மிதா பற்றி தெரியாத பல தகவல்களை நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் 80களின் காலக்கட்டத்தில் நடிகராகவும் , இயக்குநராகவும் ஜொலித்தவர். அவரது நடிப்பில் வெளியான மலையூர் மம்பட்டியான், அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை உள்ளிட்ட பல படங்கள் இன்றளவும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
தற்போது மகன் பிரசாந்தை வைத்து அந்தகன் படத்தை இயக்கி வரும் தியாகராஜன் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி தெரியாத சில தகவல்களை கூறியுள்ளார். இணைய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 1984 ஆம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை படத்தில் தியாகராஜன் மற்றும் சில்க் ஸ்மிதா இணைந்து ஆடிய "அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தொடர்ந்து சில படங்களில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், அலைகள் ஓய்வதில்லை படத்தில் கணவன் - மனைவியாக நடித்திருப்பார். இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், சில்க் ஸ்மிதாவிடம் நீங்கள் நல்ல ஆர்ட்டிஸ்ட். நல்ல குணசித்ர நடிகையாக பல படங்களில் நடிக்கலாமே எனக் கேட்டார்.
ஆனால், நடனத்தை சினிமாவில் முன்னெடுத்து பல நடிகர்கள் படங்களிலும் தான் இல்லாத நிலை இருக்க வேண்டும் என சில்க் ஸ்மிதா உருவாக்கினார். ஆனால் அவர் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது என தியாகராஜன் கூறியுள்ளார்.