மன்னிப்பு கேட்டு கதறிய ஊராட்சி செயலர்!! பாடம் புகட்டிய உயர் நீதிமன்றம் கிளை

Tamil nadu Virudhunagar
By Karthick Oct 06, 2023 07:58 AM GMT
Report

கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கியவருக்கு உயர் நீதிமன்றம் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

எட்டி உதைத்த விவகாரம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக) தலைமை வகித்தார்.மேலும் பி.டி. ஓ. மீனாட்சி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

மன்னிப்பு கேட்டு கதறிய ஊராட்சி செயலர்!! பாடம் புகட்டிய உயர் நீதிமன்றம் கிளை | Secretary Kicked Farmer Gets Bailed

இந்த கூட்டத்தில் வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த அம்மையப்பன் (52) என்ற விவசாயி பேசுகையில் "சுழற்சி முறையில் பிற கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தாதது ஏன்?. ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதங்கள் ஆகிவிட்டது. ஏன் மீண்டும் ஊராட்சி செயலாளர் இங்கு வந்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன் திடீரென எழுந்து, அம்மையப்பனின் நெஞ்சில் எட்டி மிதித்துள்ளார்.

வழக்கு பதிவு

அவரது ஆதரவாளர்களும் அம்மையப்பனைத் தாக்கினர். இதில் அம்மையப்பன் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மக்கள் எதிர்ப்பு காரணமாக கிராம சபைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில், ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வன்னியம்பட்டி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜாமீன்

மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவுறுத்தலின் பேரில், தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார். கிராம சபை கூட்டத்தில் நடந்ததற்கு செயலர் தங்கபாண்டியன் மன்னிப்பு கோருவதாக பகிரங்கமாக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லாததாக குறிப்பிட்டு, தங்கபாண்டியனுக்கு உயர் நீதிமன்றம் கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

secretary-kicked-farmer-gets-bailed

மேலும் வாரத்தில் ஒரு நாள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கிராம சபையில் விவசாயியை தாக்கியது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பதால் முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.