ஜெயலலிதா, சசிகலா அமர்ந்த நாற்காலியில் பொதுச் செயலாளராக அமரும் ஈபிஎஸ்

J Jayalalithaa ADMK AIADMK V. K. Sasikala Edappadi K. Palaniswami
By Thahir Mar 28, 2023 06:09 AM GMT
Report

ஜெயலலிதா, சசிகலாவை தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக வெற்றி பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர போகிறார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஓபிஎஸ் 

அதிமுக பொதுகுழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொதுச்செயலார் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் , ஜேடிசி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Secretary-General

இந்த வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார் இரு தரப்பு வாதங்களையும் கடந்த 22 ஆம் தேதி கேட்ட அவர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று நீதிபதி வாசித்தார் அப்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவிட்டார்.

பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கான எதிரான ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

பொதுச்செயலாளர் நாற்காலியை கைப்பற்றிய இபிஎஸ் 

1972ல் அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் கட்சியின் முதல் பொதுச்செயலாளராக இருந்தார். பின்னர் நாவலர் நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், ராகவானந்தம் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்துள்ளனர்.

Secretary-General

1989 ஆம் ஆண்டு பொதுச்செயலாளராக தேர்வான ஜெயலலிதா 2016ல் மறையும் வரை பதவியில் நீடித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டிருந்தார். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய பின் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஒருங்கிணைப்பளார்களாக செயல்பட்டு வந்தனர்.