பிரபல நடிகையின் காலை பிடிக்க மறுத்த ரஜினி - பல ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை
பிரபல நடிகை ஷோபனா நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது சொன்ன தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பிரபல நடிகை ஷோபனா நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் கடந்த 1989 ஆம் ஆண்டு அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரகுவரன், ஷோபனா, சௌகார்ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவா. இப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இதில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் ஷோபனாவின் கால்களை ரஜினி பிடிக்க வேண்டும் என இருந்துள்ளது.
ஆனால் ஒரு பெண்ணின் கால்களை தன்னால் பிடிக்க முடியாது என ரஜினி மறுத்ததாகவும், இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என கூறியதாகவும் ஷோபனா கூறியுள்ளார்.