குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க இதை டிரை பண்ணி பாருங்க...

winter குளிர் காலம் குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக வைத்திருப்பது எப்படி? குளிர்கால குறிப்புகள் Healtn tips
By Petchi Avudaiappan Dec 25, 2021 07:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

நம் வாழ்க்கையில் உணவு, உடை, வாழ்க்கைமுறை என்று குளிர் காலத்தில் இருந்து நம்மைப் பாதுகாப்பதற்காக பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வோம். சிலரால் குளிர்காலத்தை இயல்பாக எதிர்கொள்ள முடியும் என்றாலும், ஒரு சிலரால் குளிரைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இதனால் குளிர்காலம் பலருக்கும் பல்வேறு அனுபவங்களை கற்றுத்தருகிறது.  குளிர்காலத்தை எளிதாக எதிர்கொள்ள கூடிய எளிய செயல் ஒன்று உள்ளடு என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. 

குளிர்காலத்தில் உடல் கதகதப்பாக வைத்திருக்க உதவும் அந்த செயல் தண்ணீர் குடிப்பது தான். குளிர்காலத்தில் தாகம் எடுக்காத காரணத்தால் வழக்கத்தை விட குறைவான அளவுதான் தண்ணீர் குடிப்போம். இதனால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு உடலில் இருக்கும் இரத்தத்தின் அடர்த்தி குறையும், ரத்த ஓட்டமும் குறையும். இவற்றால், உடலின் வெப்பம் குறைந்து, அதிகமாகக் குளிரும். உடலில் போதிய அளவு ரத்த ஓட்டம் இல்லாமல் உடல் குளிர்ச்சி அடையும் நிலைமைக்கு ஹைபோதெர்மியா என்று பெயர்.

எனவே இவற்றைத் தடுக்க, தடுக்க தண்ணீர் குடித்து உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் கோடை காலத்தில் நமது அருந்தும் போது உடல் வெப்பமாக சிலர் உணரக்கூடும். ஆனால், நேரம் செல்லச் செல்ல டெம்பரேச்சர் குறையும். அதுமட்டுமின்றி தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடல் தன்னை காத்துக் கொள்ளும் திறனையும் மது அருந்துவதால் இழக்கும் என் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.