மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா…செல்போனில் 2000 ஆபாச படங்கள் - சிக்கிய மாணவன்

India
By Thahir Nov 23, 2022 05:22 PM GMT
Report

மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய மாணவனின் செல்போனில்  2000 ஆபாசப்படங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கழிவறையில் ரகசிய கேமரா 

பெங்களூரு ஒசகெரேஹள்ளி பள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மாணவிகள் கழிவறைக்கு சென்ற போது அங்கு இளைஞர் ஒருவன் நின்று கொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இதனையடுத்து போலீசார் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அதே கல்லூரியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் சுபம் ஆசாத் என்பது தெரியவந்தது.

சிக்கிய மாணவன் 

இதனையடுத்து போலீசார் அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில், மாணவிகளின் கழிவறையில் ரகசியமாக கேமரா பொருத்தியதும் இந்த கேமராவின் மூலமாக மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.

secret-camera-in-girls-washroom-men-student-arrest

இதனை தொடர்ந்து, ஆசாத்திடம் இருந்து ரகசிய கேமராவை பறிமுதல் செய்ததோடு, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்ததில், 2000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.