இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவுகிறதா? அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறைந்துவந்த கொரோனா பாதிப்புகள் சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் இரண்டாவது கரோனா தொற்றுப் பரவல் அலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவேக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக 25,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகிறது.
இதில் 85% பாதிப்புகள் வெறும் எட்டு மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தமிழகமும், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் தற்போது அது 2.34 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவே இரண்டாம் அலைக்கான ஆரம்பமாகவும் கருதப்படுகிறது. 2021-ஆம் ஆண்டிலேயே அதிகபட்சமாக 28,903 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 17,864 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோலவே கரோனாவுக்கு பலியான 188 பேரில் 87 பேர் மகாராஷ்டிரத்தையும், 38 பேர் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.