என்னபா மறுபடியும் சோதனை ? டி20 போட்டி ஒத்திவைப்பு காரணம் என்ன?

Krunal Pandya SLvIND COVID-positive T20I postponed
By Irumporai Jul 27, 2021 11:45 AM GMT
Report

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா கொரோனா தொற்று ஏற்பட்டதால் இலங்கைக்கு எதிராக இன்று நடக்க இருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடிவருகிறது.

ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி. டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டி நடைபெற இருந்த நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இந்தியா மற்றும் இலங்கை அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, இரண்டு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆகவே இன்று நடைபெறவிருந்த டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது.ஒருவேளை போட்டி நாளை (28-07-2021) இரண்டாவது டி20 போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் போட்டி ஒத்திவைக்கபட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .