யூரோ கோப்பை கால்பந்து தொடர்: 2வது சுற்று போட்டிகள் நாளை தொடக்கம்

Euro Cup 2021
By Petchi Avudaiappan Jun 25, 2021 02:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கால்பந்து
Report

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகள் நாளை முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

24 அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும், 3வது இடங்களை பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

இதன்படி இத்தாலி, வேல்ஸ் (ஏ பிரிவு), பெல்ஜியம், டென்மார்க் (பி), நெதர்லாந்து, ஆஸ்திரியா (சி), இங்கிலாந்து, குரோஷியா (டி), சுவீடன், ஸ்பெயின் (இ), பிரான்ஸ், ஜெர்மனி (எப்) ஆகிய 12 அணிகளும் 3-ம் இடம் பிடித்த அணிகளில் சிறந்த நான்கு அணிகளாக சுவிட்சர்லாந்து (ஏ), உக்ரைன் (சி), செக்குடியரசு (டி), போர்ச்சுக்கல் (எப்) ஆகிய 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.துருக்கி, பின்லாந்து, ரஷியா, வடக்கு மாசிடோனியா, ஸ்காட்லாந்து, ஸ்வோவக்கியா, போலந்து, ஹங்கேரி ஆகிய 8 அணிகள் வெளியேற்றப்பட்டன.

இதனிடையே இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.நாளை இவு 9.30 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் ஆட்டத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளில் முறையே 2-ம் இடத்தை பிடித்த வேல்ஸ்-டென்மார்க் அணிகள் மோதுகின்றன.

இதேபோல் நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டனில் தொடங்கும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலியும், ‘சி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.