'' ரொம்ப நாளைக்கு பிறகு டைரக்டரே ''- முருகராக மாறிய சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' இரண்டாம் பாடல் வெளியானது

Suriya EtharkkumThunindhavan Ullam Urugudhaiya
By Irumporai Dec 27, 2021 01:13 PM GMT
Report

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து உள்ளம் உருகுதையா பாடல் வெளியாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் மேலும் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

டி.இமான் இசையில் உருவான இப்படத்தின் ‘வாடா தம்பி’ என்ற முதல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. 'உள்ளம் உருகுதையா' என்ற முருகன் பக்திப் பாடலை அடிப்படையாக வைத்து பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலின் சூர்யா முருகன் வேடத்தில் காணப்படுகிறார். மன்னர் வேடத்திலும் காணப்படுகிறார். இந்தப் பாடலை பிரதீப் குமார், வந்தனா சீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர் பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடல் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு கூச்சமா இருக்கு டைரக்டரே என குறிப்பிட்டுள்ளார்