கர்நாடகாவில் இரண்டாவது முறையாக லேசான நில அதிர்வு - மக்கள் பீதி..!
கர்நாடகாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அச்சமடைந்தனர்.
லேசான நில அதிர்வு
இன்று காலை 7.45 மணிக்கு கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதே போன்று தட்சிண கன்னடா மாவட்டத்திலும் 2.3 ரிக்ட்ர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜூன் 23-ம் தேதி காலை வேலையில் ஹாசன் மாவட்டத்தில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் இரண்டாவது நில அதிர்வு
கடந்த ஒரு வார காலத்தில் இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த வகை நிலநடுக்கங்களால் பாதிப்பு எதுவும் ஏற்படாது, நிலத்தின் மேல் பரப்பில் லேசான அதிர்வு மட்டுமே இருக்கும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.