ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணமா? விவாகரத்துக்கு பின் ஒரு முடிவுக்கு வந்த தனுஷ் - ஐஸ்வர்யா

Dhanush Rajinikanth Tamil Cinema Aishwarya Rajinikanth
By Thahir 2 மாதங்கள் முன்

ஐஸ்வர்யா - தனுஷ் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் - விவாகரத்து 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் இடையில் அடிக்கடி ஏற்பட்டு வந்த மனகசப்புகளால் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் அவர்களின் அறிவிப்பு இருவரது குடும்பத்தினரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணமா? விவாகரத்துக்கு பின் ஒரு முடிவுக்கு வந்த தனுஷ் - ஐஸ்வர்யா | Second Marriage For Aishwarya After Divorce

விவாகரத்துக்கு பின் தனுஷ் தான் நடித்து வரும் படங்களிலும், ஐஸ்வர்யா தன்னுடைய இயக்குனர் வேளையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

விவாகரத்துக்கு பின் ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.

சமரசம் செய்த ரஜினிகாந்த் 

18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

இவர்களின் பிரிவு அறிவிப்பால் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து ரஜினிகாந்த் இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மகன்களும் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டதால் அவர்களது எதிர்காலத்திற்காக மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என இருவரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யாவுக்கு இரண்டாம் திருமணமா? விவாகரத்துக்கு பின் ஒரு முடிவுக்கு வந்த தனுஷ் - ஐஸ்வர்யா | Second Marriage For Aishwarya After Divorce

இதையடுத்து இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் 19-வது திருமண நாளான நவம்பர் 18-ம் தேதி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என தெரியவந்துள்ளது.

விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டாம் என இருவரும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மீண்டும் இருவரும் சேர உள்ளதால் ரசிகர்கள் என்ன இருவருக்கும் இரண்டாம் திருமணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்த தகவல்களை நவம்பர் 18-ம் தேதி இருவரும் வெளியிட்டால் தான் உண்மை என்ன என்பது தெரிய வரும்.