பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு : இணையவாசிகளின் இதயத்தை கவரும் வைரல் வீடியோ

Viral Video
By Irumporai May 22, 2022 06:04 AM GMT
Report

இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்க்கள் நமக்கு மக்ழ்ச்சியை கொடுக்கும் அந்த வகையில்  ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ பதிவில்  ஒரு ஏழை சிறுவனின் தந்தை தனது வீட்டிற்கு ஒரு பழைய சைக்கிளை வாங்கி செல்கின்றார், அதனை பார்த்தவுடன் அவரின் செல்ல மகன் துள்ளி குதிக்கிறான்.

அந்த  சிறுவனின் தந்தை அவர் வாங்கி வந்த  சைக்கிளுக்கு மாலை அணிவித்து வணங்குகின்றார் அந்த சிறுவனும் ஆனந்தமாக ஆடியப்படி தந்தையுடன் சேர்ந்து வணங்குகிறான்.

இந்த அழகான தருணத்தை கூறும் இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவைனை ஷேர் செய்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரண் தனது ட்விட்டர் பதிவில் “இது ஒரு பழைய செகண்ட் ஹேண்ட் சைக்கிள்தான் ஆனால் அவர்களின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பாருங்கள். அவர்கள் ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளதை போன்று அவர்களின் மகிழ்ச்சி உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது, சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு என்ற பாடலில் உள்ள வரிகள் போல சந்தோஷங்களுக்கு பெரிய பொருள் தேவை, நமக்கு நெருக்கமானவர்களுக்கு நமது மனதுக்கும் எது நிம்மதியை தருகிறதோ அதுதான் நம் வாழ்க்கையின் அளவிட முடியாத பரிசு.