திருச்சி விமானநிலைய மோதல் வழக்கு, சீமானுக்கு விடுதலை

Seeman
By Irumporai Aug 25, 2022 10:56 AM GMT
Report

கடந்த 2018 ஆம் வருடம் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினர்க்கும் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் சீமான் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .

 விமானநிலையத்தில் மோதல் : 

கடந்த 2018 ஆம் வருடம் ,மே மாதம் 19 ஆம் தேதியன்று திருச்சி விமானநிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வரவேற்பு அளிப்பதற்காக அக்கட்சியினர் காத்துக்கொண்டிருந்தனர் .

அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் சீமானுக்கும் வரவேற்பளிப்பதற்காக அவர்களது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமனநிலைத்தில் காத்துக்கொண்டிருந்தனர் .

திருச்சி விமானநிலைய மோதல் வழக்கு, சீமானுக்கு விடுதலை | Seaman Trichy Airport Clash Case

அப்போது இரு கட்சியினரும் ஒரேநேரத்தில் வரவேற்பில் ஈடுபட்டபோது இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது .இம்மோதலில் சிலருக்கு காயங்களும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது .

இதில் மதிமுக மாவட்ட செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்ளிட்ட 14 பேர் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் என் 6-ல் விசாரணை நடந்து வந்தது.

 சீமானுக்கு விடுதலை

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சீமானுக்கு விடுதலை அளிப்பதாக தீர்ப்பளித்தார் .இந்தவழக்கில் சீமான் உள்பட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார் .இரு தரப்பும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார்.