PFI தலைமை அலுவலகத்திற்கு சீல் - அதிகாரிகள் நடிவடிக்கை

Tamil nadu Chennai
By Thahir Oct 01, 2022 10:49 AM GMT
Report

சென்னையில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சோதனை 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அலுவலகங்கள், வீடுகளில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் அவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்ததாக கூறியும், முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதாகவும், தீவிரவாத அமைப்புகளில் சேர அவர்களை தீவிரப்படுத்துவதாகவும் PFI அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100க்கும் மேற்பட்டார் பேர் கைது செய்யப்பட்டனர். 

PFI அமைப்புக்கு தடை - சீல் 

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்கள் கவுன்சில், ரிஹாப் இந்தியா அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன், ரிஹாப் அறக்கட்டளைஉள்ளிட்ட துணை அமைப்புகளும் சட்டவிரோதமானது எனக் கூறி 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பேஸ்புக், ட்விட்டர், உள்ளிட்ட சமூக வளைத்தல பக்கத்தை முடக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.

PFI தலைமை அலுவலகத்திற்கு சீல் - அதிகாரிகள் நடிவடிக்கை | Seal To Pfi Head Office

இந்த நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

புரசைவாக்கம் மண்டல உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.