மெரினாவில் கடல் அலை மோதி மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம் - அதிகாரிகள் ஆய்வு
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாதை கடல் நீர் புகுந்து சேதமடைந்துள்ளது.
மெரினா மரப்பாதை சேதம்
மாற்றுத்திறனாளிகள் மெரினா கடலுக்கு சென்று கடல் அலைகளை ரசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரப்பாதை அமைக்க உத்தரவிட்டார்.
இதற்காக 1 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மரப்பலகை பாதையானது அமைக்கப்பட்டது. கடல் அலை கரையில் இருந்து உள்ளே புகுந்து வரும் அளவை கணக்கில் கொண்டு 25 அடி துாரத்தில் இந்த மரப்பலகை பாதையானது அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று இரவு கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இதனால் அலைகள் 25 அடி உள்ளே புகுந்ததால் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பார்க்கும் மரப்பலகை பாதையானது சேதம் அடைந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் நேரிடையாக வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் புயலுக்கு பின் இந்த சேதம் சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.