கனவை மிஞ்சும் அதிசயம்..! நீல நிறத்தில் ஒளிரும் கடல்...ஆச்சரியத்தில் திகைக்கும் மக்கள்!!
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலானது நீல நிறத்தில் ஒளிர்கின்றமை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீல நிறத்தில் ஒளிரும் கடல்
நிலவில் மனிதம் காலூன்றி கால்நூற்றாண்டு கடந்த பின்பும், தற்போதும் கடலின் ஆழத்தை சரியாக மனிதத்தால் கணிக்கிட முடியவில்லை. இன்றும் தன்னுள் பல ஆச்சரியங்களையும், மர்மங்களையும் கொண்டுள்ள கடலை காணுவது பலருக்கும் ஆச்சரியமான விஷயமே.
தற்போது, அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பசிபிக் கடல் நீல நிறத்தில் ஒளிருவது தொடர்பான வீடியோக்களை வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிறம் எவ்வாறு தொண்டீரியது தொடர்பான தேடல்களும் இணையத்தில் அதிகமாகின.
காரணம் என்ன..?
பியோலுமினசென்ஸ் (Bioluminescence) என்ற பாசி காரணமாக கடல் நீல நிறமாக மாறியிருக்கின்றது ஆராய்ச்சியில் கணடறியப்பட்டுள்ளது. அதாவது, சிறுமீன்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் ஒருவித பாசியானது, நீலநிற வண்ணத்தை வெளியிடுகிறது.
அப்போது ஒளி வெள்ளத்தில், பெரிய மீன்கள் சிறிய மீன்களை தின்றுவிடும். இதனால் இது ஏற்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் அண்மையில் பெய்த மழையால் கடலில் சேர்ந்த கழிவுகளில் இருந்து நைட்ரஜன் கடலில் இருக்கும் பொருட்களில் கலந்ததன் காரணமாகவும் இந்த ஒளி வெளியாகியிருக்கலாம் என கடலோர ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் பரவியதும் பலரும் ஒளிரும் கடலை காண கடற்கரைக்கு படையெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.