நடுக்கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்த விசைப்படகு: பாம்பனில் பரபரப்பு
srilanka
fish
water
By Jon
பாம்பனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகிலிருந்து திடீரென கரும்புகை கிளம்பியது, இதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மோட்டார் மூலம் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். எரிந்த விசைப்படகு பாம்பன் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேல் பாக்கியம் என்பவருக்கு சொந்தமான படகு என்பது தெரியவந்துள்ளது.
காலை 6 மணியளவில் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர், இந்த விபத்தில் மீன்பிடி உபகரணங்கள் மேற்பகுதிகள் எரிந்து சாம்பலானதாக தெரிகிறது.