நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தர தீர்வு- திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி போராட்டம்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

இதனால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
புது தில்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.
நீட் தேர்வு பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்சரித்த முதல் கட்சி திமுக.
அதனால்தான், இந்த தேர்வால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி, ஆரம்பத்திலிருந்தே திமுக இதனை எதிர்த்து வருகிறது.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
— M.K.Stalin (@mkstalin) July 22, 2026
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the… pic.twitter.com/HIoXWLIvwR
சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாகவும், முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வித்திட்டதாகவும் திகழும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை: நீட்தேர்வு ஒழிப்பு ஆகும்.
மற்ற எந்தக் கோரிக்கைகளை விடவும், நீட் தேர்வை ரத்து செய்வதே இந்தப் போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே இந்த சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும். நீட் தேர்வை தடைசெய்வோம். மாணவர்களைகாப்போம் என அவர் கூறியுள்ளார்.