கேரள அழகியை திருமணம் செய்து கொண்ட ஸ்காட்லாந்து எம்பி
Scotland MP Marries Kerala Woman: ஸ்காட்லாந்து தேசிய கட்சியை சேர்ந்த எம்பி மார்ட்டின் டே கேரள பெண்ணான நிதின் சந்தை திருமணம் செய்து கொண்டார்.
நட்பு காதலான தருணம்
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் நிதின் சந்த்(வயது 49), கடந்த 2008ம் ஆண்டு உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.
அங்கு தகவல்தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, தேசிய கட்சியின் முக்கிய பிரமுகரான மார்ட்டின் டே என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது, இவர்களது நட்பு பின்னாளில் காதலாக மாறியது.

இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர், இருப்பினும் கேரளத்தில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிதின் விரும்பினார்.
பாரம்பரிய உடையில் திருமணம்
சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2026ம் ஆண்டு நிதினின் ஆசை நிறைவேறியுள்ளது.

கடந்த 18ம் தேதி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் பாரம்பரிய உடை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்காட்லாந்தின் எம்பி-யான மணமகன் மார்ட்டின் டே வேட்டி அணிந்துகொண்ட மாங்கல்யத்தை கட்டினார், இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
