ஓமனை பந்தாடிய ஸ்காட்லாந்து - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

t20worldcup2021 OMAvSCO
By Petchi Avudaiappan Oct 21, 2021 07:10 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன், ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் லியாஸ் 37 , மசூத் 34 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஓமன் அணி 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.ஸ்காட்லாந்து சார்பில் டேவி, ஷ்ரீப், லீஸ்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அதிகபட்சமாக கைல் கோட்சர் 41, பெர்ரிங்டன் 31, மேத்யூ கிராஸ் 26 ரன்கள் எடுக்க 17 ஓவரில் ஸ்காட்லந்து அணி 2 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி முன்னேறியது.