WoW... T20 உலகக்கோப்பை போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி...!
நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
ஸ்காட்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி
இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இப்போட்டியின் இறுதியில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கி ஆடியது.
இப்போட்டியின் இறுதியில், அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.