உலகிலேயே முதன்முறையாக, ஸ்காட்லாந்தில் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக வழங்கும் சட்டம் அமல்…!
மாதாந்திர மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். தங்களின் குடும்பம், குழந்தைக்காக பல்வேறு துறைகளில் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அந்த நாளிலும் சற்றும் ஓய்வின்றி, தங்கள் வயிற்று வலியோடு வேலைக்கு செல்கின்றனர்.
ஸ்பெயினில் 3 நாட்கள் விடுமுறை
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறையை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்தது. இதன் மூலம் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது.

ஸ்காட்லாந்தில் இலவச சட்டம்
இந்நிலையில், உலகிலேயே முதன்முதலாக, ஸ்காட்லாந்தில் மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் உள்ள பெண்களின் கழிவறைகளிலும், பள்ளி, கல்லூரி என ஸ்காட்லாந்து நாட்டின் அனைத்து இடங்களிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக கிடைப்பதற்கு அமைச்சர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.