மணமக்கள் மீது அழுகிய தாக்காளி, முட்டையை எரியும் விநோத திருமணம்! என்னடா இது?
ஸ்காட்லாந்தில் நடைபெறும் திருமண விழாவில், வித்தியாசமான சடங்காக மணமக்களை மரத்தில் கட்டி வைத்து அழுகிய தக்காளியையும் முட்டையை அடிக்கும் சடக்கு கடைபிடிக்கப்படுகிறது.
திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய தருணம். இந்த திருமண சடங்குகள் மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வேறுபடும். ஏன் நாடுகளுக்கும் வேறுபடும்.

அந்த வகையில், ஸ்காட்லாந்தில் திருமணத்திற்கு முன்பு மணமகனையும், மணமகளையும் ஒரு மரத்தில் கட்டி வைத்து அவர்கள் மீது அழுகிய முட்டை, தக்காளி, அழுகிய மீன், சாக்லெட் சிரப், பால், மாவு, ஆகியவற்றை வீசுவதை சடங்காக வைத்திருக்கின்றனர்.
இந்த சடங்கு செய்வதால் வருங்காலத்தில் மணமக்கள் மீது கெட்ட சக்திகள் எதுவும் வராது என்றும், இதனால் வருங்காலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து சவால்களை சுலபமாக சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்.