இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம்: கடுப்பான ஷிகர் தவான்
Shikhar Dhawan
INDvsSL
By Petchi Avudaiappan
இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு குறைவான ரன்கள் எடுத்ததே காரணம் என இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கை அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
இதனிடையே இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஷிகர் தவான் 50 ரன்ன்கள் குறைவாக எடுத்துவிட்டதே தோல்விக்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.
மேலும் அறிமுக வீரர்களாக களமிறங்கியவர்களுக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா? Manithan
