சந்திரயான் தந்த ஹிண்ட்...நிலவில் கண்டறியப்பட்ட நீர் கூறுகள்..!
நிலவில் நீர் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது நிலவு ஆராய்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
சந்திரயான் 1 பயணம்
கடந்த மாதம் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் அறியப்படாத தென்துருவத்தில் கால்பதித்து, பல தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வருகின்றது. நிலவின் தென் துருவம் பற்றிய ஆரய்ச்சிகள் இதன் மூலம் வேகமெடுக்கும் என நம்பப்படும் சூழலில், தற்போது சந்திரயான் 1 விண்கலத்தின் தரவுகளின் மூலம் புதிய கண்டுபிடிப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2008ல் நிலவில் நீர் கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய, சந்திரயான் - 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் தொலைவில் இருந்தபடியே நிலவை ஆய்வு செய்து, தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
நீர் கூறுகள் கண்டுபிடிப்பு
இந்த தரவுகளை, அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்த நிலையில், இதன்படி, நிலவில் உள்ள நீரின் செறிவு, விநியோகம் அதன் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்வதும், நிலவில் மனிதர்கள் எதிர்காலத்தில் ஆய்வு மேற்கொள்ள நீர் ஆதாரங்களை வழங்குவதும் முக்கியமான பணி என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் மேற்பரப்பில் உள்ள அதிக ஆற்றல் உடைய எலக்ட்ரான் உதவியுடன், நிலவில் நீர் கூறுகள் உருவாகியிருக்க வாய்ப்புள்ளதாக நேச்சர் அஸ்ட்ரானமி என்ற அறிவியல் இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.