'மறக்குமா நெஞ்சம்' - குளோனிங் முறையில் டோலி ஆட்டை உருவாக்கிய விஞ்ஞானி காலமானார்!

Death England World
By Jiyath Sep 12, 2023 06:17 AM GMT
Report

உலகில் முதன்முதலில் குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழிநடத்திய விஞ்ஞானி காலமானார். 

குளோனிங் ஆடு

ஒரு உயிரைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்குவதுதான் குளோனிங் (Cloning) எனப்படும். அதாவது ஒரு உயிரினத்தை மரபியல் ரீதியில், அதாவது உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள் போன்றவற்றை உருவாக்கும் செயல்முறையே குளோனிங்.

இந்த குளோனிங் மனிதர்களுக்கு செயல்படுத்த முடியவில்லை. ஆனால் கடந்த 1996ம் ஆண்டு விலங்குகளில் சாத்தியப்பட்டது. இந்த குளோனிங் முறையைப் பற்றி முதன் முதலில் பிரிட்டிஷ் விஞ்ஞானி 'இயன் வில்முட்' கூறியபோது, இந்த உலகமும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தது. மேலும் இதுகுறித்து மிகப்பெரிய விவாதங்களும் எழுந்தன.

இயான் வில்முட் இந்த குளோனிங் முறையை பயன்படுத்தி முதன் முதலில் ஆடு ஒன்றை உருவாக்கினார். அந்த ஆடு 6LL3 என்று குறிப்பிடப்பட்டது. பிறகு அந்த ஆட்டிற்கு அமெரிக்க பாடகரான டோலி பார்ட்டனின் நினைவாக 'டோலி' என்று பெயரிடப்பட்டது. அப்போது இது மிகப்பெரிய விஞ்ஞான புரட்சியாகவும் பார்க்கப்பட்டது. மேலும், விலங்கு மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றங்களுக்கு அது வழிவகுத்தது.

இயான் வில்முட் காலமானார்

இந்நிலையில் குளோனிங் முறையில் டோலி ஆட்டை உருவாக்கி சாதனைபடைத்த குழுவை (ஸ்காட்லந்தின் எடின்பரோ (Edinburgh) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு) வழிநடத்திய விஞ்ஞானி இயான் விலமுட், பார்க்கின்சன் நோயின் காரணமாக தனது 79 வயதில் காலமானார்.

விஞ்ஞானி இயன் வில்மட் கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார் மற்றும் 2018ஆம் ஆண்டு அவர் பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.