ஒரு உயிரினம் கூட இல்லாமல் பூமி மொத்தமாக அழியும் - விஞ்ஞானிகள்பகீர் தகவல்!

World
By Sumathi Jun 22, 2024 11:08 AM GMT
Report

பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

பூமியில் பேரழிவு

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பூமி குறித்த ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதில், 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு உயிரினம் கூட இல்லாமல் பூமி மொத்தமாக அழியும் - விஞ்ஞானிகள்பகீர் தகவல்! | Scientist Warns Earth Will Destroy

பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளது.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம். அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த், உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம்.

புயல் எப்படி உருவாகிறதுன்னு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்...

புயல் எப்படி உருவாகிறதுன்னு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்...

பாங்கேயா அல்டிமா

இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது. பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும்.

ஒரு உயிரினம் கூட இல்லாமல் பூமி மொத்தமாக அழியும் - விஞ்ஞானிகள்பகீர் தகவல்! | Scientist Warns Earth Will Destroy

வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும். அவ்வாறு நிகழும்போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும்.

அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் என எச்சரித்துள்ளார்.