பைக் பார்க்கிங் பிரச்சினை..விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி!
பைக் பார்க்கிங் பிரச்சினையில் விஞ்ஞானி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ஸ்வர்ன்கர் (வயது 39) என்பவர் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அபிஷேக், குடியிருப்பில் உள்ள கீழ் தளத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அபிஷேக் நிறுத்தியிருந்த பைக்கால் இடையூறு ஏற்படுவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த மோண்டி என்பவர் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் அபிஷேக்கை கீழே தள்ளி மோண்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் விலக்கியுள்ளனர்.
விஞ்ஞானி
மேலும் இதில் பலத்த படுகாயம் அடைந்த அபிஷேக்கை அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மோண்டியை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
வாடகை வீட்டில் பைக்கை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சிறு வாய்தகராறில் விஞ்ஞானி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மொஹாலியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.