கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் பலி - ’சைன்சு பொய் சொல்லாது; ஆனா மோடி சொல்வாரு’ - ராகுல் காந்தி காட்டம்

Rahul Gandhi Narendra Modi
By Swetha Subash May 06, 2022 08:10 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் மோடி பொய் சொல்வார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உலகம் முழுதும் 1.50 கோடி பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் இதில், தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பாவில் உள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவில் அதிக பலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

குறிப்பாக, இந்தியாவில், 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு வெளியிட்ட எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம் ஆகும்.

கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் பலி - ’சைன்சு பொய் சொல்லாது; ஆனா மோடி சொல்வாரு’ - ராகுல் காந்தி காட்டம் | Science Does Not Lie But Modi Does Says Rahul

இதன்படி உலக அளவிலான பலியில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், மோடி அரசு 4.8 லட்சம் என பொய் சொல்கிறது என ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டில் "கொரோனா தொற்றுநோயால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். அரசு கூறுவது போல் 4.8 லட்சம் இல்லை. அறிவியல் பொய் சொல்லாது. ஆனால் மோடி சொல்வார்".

உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.