தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு..!
Tamil nadu
Government of Tamil Nadu
By Thahir
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை சனிக்கிழமை (ஜூலை 15) முழுவேலைநாளாக வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிகளில் காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.