ஜுன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Tamil nadu Government of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir May 26, 2023 05:44 AM GMT
Report

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் ஜுன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 1 ஆம் தேதி 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஜுன் 5 தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Schools will open on June 7 in Tamil Nadu

அப்போது பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பு குறித்து 2 தேதிகளை முதலமைச்சரிடம் வழங்கியிருப்பதாகவும், பள்ளிகள் திறப்பு தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

ஜுன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

இதனால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை என்பது நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Schools will open on June 7 in Tamil Nadu

இதனிடையே 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு ஜுன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.