பள்ளிகளைத் திறப்பதில் உறுதியாக செயல்பட வேண்டும் - எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

Covid 19
By Petchi Avudaiappan Jun 24, 2021 01:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 பள்ளிகளைத் திறப்பதில் நாம் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஏனெனில் இது இளம் தலைமுறையை, குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதியில்லாத விளிம்புநிலை மாணவர்களைக் கடுமையாக பாதித்துள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகளின் குணாதிசயங்களை வளர்ப்பதில் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட நாம் முயல வேண்டும். அதுகுறித்த திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட வேண்டும் என்று ரன்தீப் குலேரியா கூறினார்.