“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே”- மகளுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சியான காரியம்

turkey viral photo dad daughter shaved head father love
By Swetha Subash Jan 27, 2022 08:46 AM GMT
Report

மகளின் நெற்றியோடு நெற்றியாக முட்டி அன்பை வெளிப்படுத்தும் ஒரு பாசக்காரதந்தையின் புகைப்படம் இணையவாசிகளின் இதயத்தை வாட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த புகைப்படத்தில் தந்தை மகள் இருவரின் தலையும் கொஞ்சம் ஷேவ் செயயப்பட்டுள்ளது. சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதன்காரணமாக அவரது தலைமுடியை ஷேவ் செய்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ததற்கான வடுக்களும் உள்ளது. தலையில் சிறுமிக்கு தையல் போடப்பட்டுள்ளது. தன் மகளுக்கு தைரியம் கொடுக்கவும்.

அவளுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவிக்கும் வண்ணம் அவரது தந்தை தனது தலையை ஷேவ் செய்து தலையில் தையல் போட்டது போல் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் அந்த பாசக்கார தந்தை.

துருக்கியை சேர்ந்த ஃபிகன் என்ற ஆசிரியர் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

போட்டோ கேப்ஷனில், சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய அப்பாவும் அதுபோலவே ஷேவ் செய்துக்கொண்டுள்ளார். என் கண்கள் கலங்குகிறது. எனப் பதிவிட்டுள்ளார்.

ஏராளமானார் இந்த புகைப்படத்தை ரீட்வீட் செய்துள்ளனர்.