1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது : அமைச்சர் சொன்ன தகவல் என்ன

anbilmahesh schollopen
By Irumporai Sep 05, 2021 10:06 PM GMT
Report

தமிழகத்தில் 1- முதல் 8- ம் வகுப்பு வரை பள்ளிகள் துவங்குவது குறித்து 8ம்தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விருதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது 9ல் இருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் முதல் 8 நாட்கள் பள்ளிகள் எப்படி உள்ளது என்பதை கண்காணிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஆகவே 1- முதல் 8- ம் வகுப்பு வரை பள்ளிகள் துவங்குவது குறித்து 8ம்தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறிய அமைச்சர் முதல் 8 நாட்கள் பள்ளிகளில் எந்த வகையிலான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனக் கூறினார்.