கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

kanyakumari heavyflood schoolsleave
By Petchi Avudaiappan Oct 17, 2021 05:20 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் பருவமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த 15 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14 ஆம் தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உயர்ந்தது.

மேலும் பேச்சிப்பாறை, குற்றியாறு, கடையாலுமூடு, களியல் உட்பட குமரி மலை கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மலை கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இதனிடையே கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.