கனமழையால் 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Heavy rain TN schools
By Petchi Avudaiappan Nov 03, 2021 03:50 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

கனமழை காரணமாக சென்னை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. அதேசமயம்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.